இது வெளியில் தெரிஞ்சா அசிங்கம் ஆகிரும் சார்! அதிகாரிகளிடம் கெஞ்சிய பிரபல நடிகரின் மகள்
பிரபல நடிகரான ஒய்.ஜி.மகேந்திராவின் மகள், அதிகாரிகளிடம் கெஞ்சிய வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது
தமிழகத்தின் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு சொந்தமான வீட்டில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகள் மதுவந்தி வசித்து வருகிறார். இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், அந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு அவர் பல மாதங்களாக கடனை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும், வலியுறுத்தியும், மதுவந்தி, நிலுவைத் தொகையான 1,2130 867 ரூபாய் வீட்டுக்கடனை கொடுக்கமால இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து அந்த பைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் நீதிபதிகளின் உத்தரவுப்படி வழக்கறிஞர் மற்றும் கமிஷனர் வினோத்குமார் முன்னிலையில் மதுவந்தியின் குறிப்பிட்ட் அந்த வீட்டிற்கு சீல் வைக்க சென்றுள்ளனர்.
இதை அறிந்த மதுவந்தி, அதிகாரிகளிடம், சார் ப்ளீஸ், நான் கெஞ்சி கேக்குறேன், இது வெளியில் தெரிந்தால் எனக்கு ரொம்ப ரொம்ப அசிங்கமாக போய்விடும் சார், ப்ளீஸ் நான் ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்கொள்கிறேன் என்று கெஞ்சி கேட்கிறார்.
பிரபல ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பி கட்டாத காரணத்தினால், பா.ஜ.க நிர்வாகியும் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.#Madhuvanti pic.twitter.com/vpSLB6CVhp
— Appuchandrasekaran (@Appuchandrasek4) October 14, 2021
அதற்கு அந்த அதிகாரிகள் இதைத் தான் கடந்த மாதமும் சொன்னீர்கள் என்று கூற, உடனே மதுவந்தி இந்த முறை அப்படி இருக்காது, கண்டிப்பாக கொடுத்துவிடுவேன் என்று கூறி கெஞ்சுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து மதுவந்தி எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.