லிட்டருக்கு 57 கிமீ Mileage தரும் Yamaha Bike.., விலை மற்றும் மாடல் குறித்த விவரங்கள்
லிட்டருக்கு 57 கிமீ Mileage வழங்கும் யமஹா பைக்கின் விவரங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எந்த மாடல்?
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று Yamaha. இந்நிறுவனத்தின் பிரபல பைக்குகளின் ஒன்றான யமஹா எம்டி15 (Yamaha MT15) பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்நிறுவனம், 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 15,124 Yamaha MT15 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 8,738 ஆகும்.
அதன்படி பார்த்தால் 73.08% வளர்ச்சி ஆகும். Yamaha MT15 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.69 லட்சமாகவும், Top variant விலை ரூ.1.74 லட்சமாகவும் உள்ளது. இவை Ex-showroom Price என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன அம்சங்கள்?
இந்த Yamaha MT15 பைக்கில் 155 cc liquid cooled 4 valve engine பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் engine உள்ளது.
மேலும் இதில், Assist மற்றும் slipper clutch வசதி உள்ளது. பைக்கின் பிரேக்கை பொறுத்தவரை முன் பகுதியில் 282 மிமீ Disc brake -ம், பின் பகுதியில் 220 மிமீ Disc brake -ம் கொடுக்கப்பட்டுள்ளன.
அதோடு, Dual channel ABS, Multi-function LCD instrument cluster, Yamaha Y-Connect app ஆகிய வசதிகளும் உள்ளன.
Yamaha MT15 பைக்கானது Dark Matte Blue, Metallic Black, Cyan Storm DLX, Ice Blue-Vermillion DLX, Racing Blue DLX, Metallic Black DLX ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதை தவிர Monster Energy Yamaha MotoGP Edition விற்பனையில் உள்ளது.
மேலும், engine உடன் 6 Speed Gear Box இணைக்கப்பட்டுள்ளது. அதோடு, பைக்கில் 10 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. E20 Fuel -ல் இயங்கக்கூடிய தன்மையும் இதற்கு உண்டு.
குறிப்பாக இந்த பைக்கானது ஒரு லிட்டருக்கு 56.87 கிலோ மீட்டர் Mileage வழங்கும் என்பதால் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |