இந்தியாவின் முதல் 150cc ஹைபிரிட் பைகை அறிமுகப்படுத்தியுள்ளது Yamaha!
ஜப்பானின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான யமஹா (Yamaha), இந்தியாவில் தனது முதல் 150cc ஹைபிரிட் மோட்டார்சைக்கிளான FZ-S Fi Hybrid-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,44,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மொடல் புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் வருகிறது.
வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்
Muscular Look: Yamaha FZ-S Fi வடிவமைப்புடன், புதிய டாங்க் கவர் மற்றும் இன்டிக்ரேட்டெட் டர்ன் சிக்னல்களுடன் கிடைக்கிறது.
4.2-inch TFT display: call/notification alerts, music playback control, smart Connectivity போன்ற அம்சங்கள் கொண்ட பேசும் டிஸ்ப்ளே இணைக்கப்பட்டுள்ளது.
புதிய ஹேண்டில்-பார் மற்றும் ஹார்ன் ஸ்விட்ச்: எளிதாக அணுகும்படி புது இடத்தில் மாற்றப்பட்டுள்ளது.
2 வண்ண விருப்பம்: Racing Blue மற்றும் Cyan Metallic Grey என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
கூடுதலாக airplane-style fuel cap பைக்கிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
எஞ்சின் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம்
149cc, single-cylinder என்ஜின் 12.4 hp பவரும், 13.3 Nm டார்க்கும் உற்பத்தி செய்கிறது.
புதிய 'இன்டிக்ரேட்டட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் (ISG)': இது Smart Motor Generator (SMG) உடன் இணைந்து செயல்பட்டு மிதமான டார்க் புஸ்ட் வழங்குகிறது.
ஸ்மார்ட் ஸ்டார்ட் & ஸ்டாப் டெக்னாலஜி: பைக் டிராஃபிக்கில் நிற்கும்போது தானாக ஆஃப் ஆகும், மேலும் சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டம் உடன் இயங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Yamaha FZ-S Fi Hybrid