ஒரே படத்தில் 1000 கோடி வசூல்! இந்தியாவின் உச்ச நடிகர் யஷின் சொத்து மதிப்பு
இன்று 39வது பிறந்தநாள் கொண்டாடும் கன்னட நடிகர் யஷின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
பிரபல நடிகர்
கேஜிஎப் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறியவர் யஷ். கர்நாடகாவின் பூவனஹள்ளியைச் சேர்ந்த இவர் 2004யில் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.
பின்னர் 2007யில் வெளியான ஜம்படா ஹுடுகி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகன் ஆனார்.
பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், 2018ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎப்' திரைப்பட ம் கன்னட திரையுலகை மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகையே மிரட்டிய அளவுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதற்கு ஏற்ப 1000 கோடி வசூலை எட்டியதால், யஷ் இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகரானார்.
கேஜிப் இரண்டு பாகங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 1500 கோடி வசூலைக் கொடுத்த ஹீரோவாக யஷ் விஸ்வரூபம் எடுத்தார். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டாக்ஷிக்'. இதற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், இந்தியில் தயாராகும் ராமாயணா படத்தில் ராவணனாக நடிக்க யஷிற்கு சுமார் 200 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு
யஷ் விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், ஹைடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார்.
பெங்களூருவில் அவர் வசிக்கும் duplex வீட்டின் மதிப்பு ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
யஷின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.60 என்று கூறப்பட்டாலும், அவர் படங்களுக்கு பெறும் ஊதியம் மூலம் அவரது மதிப்பு 200 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |