பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய RCB வீரருக்கு தடை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் யஷ் தயாளுக்கு பாலியல் வழக்கில் சிக்கியதன் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யஷ் தயாள்
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியவர் யஷ் தயாள்.
இவர் மீது சமீபத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பெண்ணுக்கு அப்போது 17 வயதே ஆனதால், யஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேச டி20 லீக்கில் விளையாட யஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக யஷ் தயாள் ரூ.7 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். இந்த தடையானது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |