சரவெடியாய் வெடித்த ஜெய்ஸ்வால்! 162 பந்துகளில் 155 ஓட்டங்கள் விளாசல்..டிராவில் முடிந்த டெஸ்ட்
Yashasvi jaiswal 155 runs vs new zealand A: இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா ஏ அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யஷ் ரத்தோட் இருவரும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக சதம் விளாச இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 155 ஓட்டங்கள்
இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சின் ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ஏ 346 ஓட்டங்களும், நியூசிலாந்து ஏ 424 ஓட்டங்களும் குவித்தன.
நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று இந்தியா ஏ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஆட்டமிழக்காமல் 162 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 155 ஓட்டங்கள் விளாசினார்.
யஷ் ரத்தோட் (Yash Rathod) 122 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.
