265 ஓட்டங்கள் அடித்து நொறுக்கிய ஜெய்ஸ்வால்! 4 சிக்ஸர்கள், 30 பவுண்டரிகள் விளாசல்
இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்
இந்தப் போட்டியில் உனட்கட் மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
துலீப் கோப்பை தொடரில் மேற்கு மண்டல அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.
இந்திய அணி வீரர்கள் துலீப் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். கோயம்புத்தூரில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
Photo Credit: PERIASAMY M
மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 270 ஓட்டங்களும், தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 327 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது.
துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார். சிக்ஸர்கள், பவுண்டரிகளை விளாசிய அவர் இரட்டை சதம் விளாசினார்.
323 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 4 சிக்ஸர்கள் மற்றும் 30 பவுண்டரிகளுடன் 265 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சர்பராஸ் கான் 127 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார். இதன்மூலம் மேற்கு மண்டல அணி 4 விக்கெட் இழப்புக்கு 585 குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் களமிறங்கிய தெற்கு மண்டல அணி 7 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 315 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகின்றது.