இவன் வேற லெவல்! ஷான் மார்ஷ் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்
ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்து சாதனைப் படைத்துள்ளார்.
13 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்த ஜெய்ஸ்வால்
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணி, கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 98 ஓட்டங்கள் எடுத்து மாஸ் காட்டினார்.
இதனால், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். தொடக்கத்தில் மிக அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில்50 ஓட்டங்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்
இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நேற்று 66-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியின் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களத்தில் இறங்கியதும் சும்மா மைதானத்தையே அதிர வைத்தார். அடுத்து வந்த பந்துகளை வானத்தில் பறக்க விட்டு ராஜஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 36 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த அன்கேப்ட் வீரர் என்ற சாதனையை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 625 ஓட்டங்களை அடித்து மாஸ்காட்டியுள்ளார்.
மேலும், இதற்கு முன்பு கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலியா வீரரான ஷான் மார்ஷ் 616 ஓட்டங்கள் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.