அன்று பானிபூரி விற்றவர்... இன்று இந்திய அணியில் - 21 வயதில் சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்
21 வயதே ஆகும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இந்த சின்ன வயதில் கிரிக்கெட் உலகத்தில் அனைவரின் பார்வையையும் திரும்ப வைத்துள்ளார்.
மும்பையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.
ஒரு முறை அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் விளையாடியபோது சில நபர்களால் விரட்டியடிக்கப்பட்டார்.
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சச்சின் விளையாட்டை பார்ப்பதற்காக, வேறு வழியில்லாமல் மரத்தின் மீது ஏறி கிரிக்கெட்டை பார்த்தார்.
தன் நண்பர்களிடம் ஒரு நாள் நானும், இந்த மும்பை, ஆசாத் மைதானத்தில் விளையாடுவேன் என்று அடிக்கடி கூறுவாராம்.
பானிபூரி விற்றவர் இன்று இந்திய அணியில்
நடுத்தர குடும்பத்தில் பிறந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் பானி பூரி விற்று தன்னுடைய வாழ்க்கையை நடத்தியுள்ளார். இன்று படிப்படியாக முன்னேறி கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார்.
முதன் முதலாக கிரிக்கெட் உலகில் நுழையும் போது ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.
பயிற்சியாளர் சுரேந்திராவிடம் சென்று ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதன் பிறகு கிடைத்த முதல் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஜெய்ஸ்வால் அதிரடி சதத்தை விளாசி கிரிக்கெட் உலகில் தன் வருகையை அறிவித்துக் கொண்டார்.
இதன் பின்புதான், யு19 அணியில் ஜெய்ஷ்வாலுக்கு டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும், ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். சில சமயங்களில் ஜெய்ஸ்வால் ஆங்கிலத்தில் பேசும்போது தவறாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசுவதில் உறுதியாக இருந்தது அவரின் மன உறுதியை காட்டுகிறது.
ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், இன்று அவரின் திறமைக் கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அவரை ராஜஸ்தான் அணியிடமிருந்து ஜெய்ஷ்வாலை வாங்க முடியாது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புஜாராவின் இடத்தில் களமிறங்கும் ஜெய்ஸ்வால் மீது ரசிகர்கள் தங்களது வெற்றியாகவே பார்க்கிறார்கள். இவர் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இந்த வாய்ப்பை ஜெய்ஸ்வால் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |