யாருப்பா இவன் - ஜெய்ஸ்வாலை புகழ்ந்து தள்ளிய கோலி, ரெய்னா
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 13 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து மைதானத்தையே அதிர வைத்த ஜெய்ஸ்வாலை விராட்கோலியும், ரெய்னாவும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்
நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்ட ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து எதிரணியை மிரள வைத்தார்.
இதனால், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவரின் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜெய்ஸ்வாலை விராட்கோலியும், ரெய்னாவும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
@SimranbaggaOffc
விராட் கோலி
பெங்களூரு வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சமீபத்தில் தான் பார்த்த மிகச்சிறப்பான பேட்டிங். ஜெய்ஸ்வாலின் திறமை அற்புதமானது என்று பதிவிட்டுள்ளார்.
@ImJaiswal_19
ரெய்னா
ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தைப் பார்த்த வீரர் ரெய்னா இது தொடர்பாக பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக நான் இருந்தால், இவரை உலகக் கோப்பை தொடருக்கு இன்றைக்கே ஒப்பந்தம் செய்திருப்பேன். இவருடைய துடுப்பாட்டம் சேவாக்கை நினைவுப்படுத்துகிறது. ரோஹித் சர்மாவும் ஜெய்ஸ்வாலின் துடுப்பாட்டத்தை பார்த்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.