மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகிட்டேன்... ஆனா வீட்டுக்கு இன்னும் போகல... விபத்தில் இறந்த தோழி நினைவோடு நடிகை யாஷிகா
மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகியும் இப்போதைக்கு வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகை யாஷிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கினார் என்பதும் அதில் அவரது உயிர்த்தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
கார் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், நான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டேன். ஆனால் இன்னும் வீட்டுக்கு செல்லவில்லை.
வீட்டுக்கு சென்றால் என்னுடைய உயிர்த்தோழி பவானியின் ஞாபகம் வரும் என்பதால் இப்போதைக்கு வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை.
மேலும் தனக்கு தெரிந்த ந்ர்ஸ் ஒருவர் வீட்டில் தான் தற்போது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.