நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்! தோழி உயிரிழந்த நிலையில் அதிரடி நடவடிக்கை
காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், யாஷிகா உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது யாஷிகா உள்ளிட்ட மூவரும் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய யாஷிகா மீது நேற்று மூன்று பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.