விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவின் நிலை என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்..
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா, மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர்.
கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் பார்ட்டிகு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் யாஷிகா காரை வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தடுப்பு சுவரின் மேல் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. அந்த கொடூர விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் சிக்கி உடல் முழுவதும் படுங்காயங்களுடன் உயிர் தப்பிய யாஷிகாவிற்கு முதுகு, இடுப்பு, வயிறு, கால் போன்ற பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கண்கலங்க செய்துள்ளது. அவருக்கு உடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மிகப்பெரிய தையல் போட்டுள்ள வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவரது ரசிகர்கள் விரைவில் நலமைடைய நாங்கள் பிராத்திக்கிறோம். கவலை வேண்டாம்.. என்று ஆறுதலாக கூறி வருகின்றனர்.