கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் எப்படி இருக்கிறார்? அவரின் நெருங்கிய தோழியான நடிகை ஐஸ்வர்யா டட்டா வெளியிட்ட தகவல்
பிரபல திரைப்பட நடிகையான யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா டட்டா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில், நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் வந்த கார் கார் சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி (28), என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து யாஷிகா மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவர் படுகாயமடைந்துள்ளதால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவர் உடல் நிலை குறித்து, யாஷிகாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான ஐஸ்வர்யா டட்டா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய நண்பர் நலமாக இருக்கிறார், விரைவில் நல்ல நிலையில் திரும்புவார், நல்ல மன உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Recent post on Instagram our friend aishwarya dutta..she is fine ? #YashikaAnand ❤️ pic.twitter.com/NNwzpwhrVp
— Billa Sm*ᵛᵃˡᶤᵐᵃᶤ (@MersalSm2) July 25, 2021
இதைக் கண்ட யாஷிகா ரசிகர்கள், அவருக்கு தங்களுடைய நன்றியை குறிப்பிட்டு வருகின்றனர்.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        