நடிகை யாஷிகா கார் விபத்தில் உயிரிழந்த பெண் இவர் தான்? வெளியான புகைப்படம்: கடும் வேதனையில் ரசிகர்கள்
பிரபல திரைப்பட நடிகையான யாஷிகா கார் விபத்தி உயிரிழந்த பெண் தொடர்பான புகைப்படம் வெளியாகி, இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் , மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு வேகமாக வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்பூசி சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இதனால், காரின் உள்ளே இருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் காப்பாற்றும் படி கூச்சலிட்டதால், உடனடியாக அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீடக போராடிய போது தான், உள்ளே யாஷிகா ஆனந்த் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதன் பின் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காரில் பயணித்த யாஷிகாவின் நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்தார்.
பொலிசார் இது குறித்து கூறுகையில், கார் விபத்தில் உயிரிழந்தது நடிகை யாஷிகா ஆனந்த்தின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி (28) என்பது தெரியவந்துள்ளது.
மேல்சிகிச்சைக்காக நடிகை யாஷிகா ஆனந்த், அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் என மூன்று பேரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், காரில் பயணித்த சிலர் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்தனர்.
ஆனால் அந்தத் தகவலை பொலிசார் உறுதிப்படுத்தவில்லை. விசாரணை முடிவில்தான் மது அருந்தினார்களா என்ற தகவல் தெரியவரும். இருப்பினும், இந்த விபத்தின் போது யாஷிகா தான் கார் ஓட்டி வந்ததால், அவர் மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பவாணி என்பவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் யாஷிகா ஆனந்த மற்றும் உடன் நண்பர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் பணியாற்று வந்த பவானி, வார விடுமுறையைக் கழிப்பதற்காக நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் 2 ஆண் நண்பர்கள் என 4 பேர் மாமல்லபுரத்துக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கி நடிகை யாஷிகா ஆனந்த், காரில் தன்னுடைய நண்பர்களுடன் புறப்பட்டிருக்கிறார். காரை நடிகை யாஷிகா ஓட்டியிருக்கிறார். அதன் பின்னரே இந்த விபத்து நடந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.