32 பந்தில் 6 சிக்ஸர், 60 ரன்! BPLயில் ருத்ர தாண்டவமாடிய வீரர்
வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் தர்பார் ராஜ்ஷாஹி அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரங்க்பூர் ரைடர்ஸை வீழ்த்தியது.
யாசிர் அலி விளாசல்
BPL தொடரின் 31வது போட்டியில் தர்பார் ராஜ்ஷாஹி மற்றும் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய தர்பார் ராஜ்ஷாஹி அணியில் முகமது ஹாரிஸ் 19 ஓட்டங்களில் வெளியேற, ஷபிர் ஹொசைன் 19 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசினார்.
அனமுல் நிதானமாக ஆட, யாசிர் அலி ருத்ர தாண்டவமாடினார். இவர்களின் ஆட்டம் மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட யாசிர் அலி (Yasir Ali) 32 பந்துகளில் 60 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து அனமுல் 31 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
ரியான் பர்ல் மாயாஜாலம்
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க தர்பார் அணி 170 ஓட்டங்கள் எடுத்தது. குஷ்தில் ஷா, அகிஃப் ஜாவேத் தலா 3 விக்கெட்டுகளும், ரஹிபுல் ஹசன் மற்றும் நஹித் ஹசன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து ஆடிய ரங்க்பூர் ரைடர்ஸ் அணி டஸ்கின் அகமது, ரியான் பர்ல், மெஹெரொப் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 19.2 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், தர்பார் ராஜ்ஷாஹி அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சைப் ஹசன் 43 (29) ஓட்டங்களும், நூருல் ஹசன் 41 (26) ஓட்டங்களும் எடுத்தனர். ரியான் பர்ல் (Ryan Burl) 4 விக்கெட்டுகளும், டஸ்கின் அகமது மற்றும் மெஹெராப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |