களமிறங்கும்போது தடுக்கி விழுந்த வீராங்கனை! உதவாமல் வாய் விட்டு சிரித்த சக வீராங்கனைகள்..வைரலாகும் வீடியோ
இந்திய கிரிக்கெட் வீராங்கனை யஸ்டிகா பாட்டியா களமிறங்க முயன்றபோது தடுக்கி விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
காமல்வெல்த் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா தலையில் அடிபட்டதால் துடுப்பாட்டம் செய்யவில்லை. அவருக்கு பதிலாக யஸ்டிகா பாட்டியா களமிறங்க முற்பட்டார்.
அப்போது அவர் பவுண்டரி எல்லையில் கால் இடறி தலைகீழாக கவிழ்ந்து விழுந்தார். இதனைக் கண்ட ஸ்மிருதி மந்தனா உட்பட சக வீராங்கனைகள் அனைவரும் வாய்விட்டு சிரிந்தனர் .
பின்னர் தானாக எழுந்த யஸ்டிகா துடுப்பாட்டம் செய்ய சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.