அன்ரிக் நோர்கியாவின் போஸ்டருக்கு முன் க்யூட்டா போஸ் கொடுத்த மனைவி - வைரல் புகைப்படம்
அன்ரிக் நோர்கியாவின் போஸ்டருக்கு முன் க்யூட்டா போஸ் கொடுத்த அவரது மனைவியின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி அணியை வீழ்த்திய குஜராத் அணி
நேற்று 16-வது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 162 ஓட்டங்களை சேர்த்தது.
இதனையடுத்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களத்தில் இறங்கியது. இப்போட்டியின் முடிவில், துடுப்பாட்டம் செய்த குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
க்யூட்டா போஸ் கொடுத்த மனைவி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் முன்பு, டெல்லி கேபிடல்ஸ் வீரர் அன்ரிக் நோர்கியாவின் போஸ்டருக்கு முன் க்யூட்டாக அவரது மனைவி மிகேலா நோர்கியா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க என்று வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
In today's episode of wholesome couple goals ??#YehHaiNayiDilli #IPL2023 pic.twitter.com/T9mZNh1YSH
— Delhi Capitals (@DelhiCapitals) April 5, 2023