இங்கிலாந்தில் அடர் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
Yellow fog warning issued across England: பிரித்தானியாவின் பல பகுதியில் நிலவி வரும் தீவிர பனிமூட்டம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையமான மெட் ஆபீஸ்(Met Office) மோசமான வானிலையை கருத்தில் கொண்டு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

கடும் பனிமூட்டம் காரணமாக இரவில் பார்வைத் திறன் 50 மீட்டருக்கு குறைவாக இருக்க கூடும் என்பதால் ரயில் மற்றும் விமானங்களின் கால அட்டவணையில் தாமதங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நிலவி வரும் அதிக காற்றழுத்த மண்டலமே இத்தகைய நிலையற்ற வானிலைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கையானது Stoke-on-Trent, East and West Midlands, மேற்கில் Exeter வரையிலும், தெற்கே Brighton வரையிலும் பரவி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ Yellow weather warning issued ⚠️ Fog across parts of England Sunday 00:00 – Sunday 10:00 Latest info 👉 https://t.co/TfU9Ok8qZD Stay #WeatherAware⚠️ https://t.co/p5sR9Nl7W0
— Met Office (@metoffice) November 7, 2026
காலை 10.00க்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பனி மூட்டம் விலகி மீண்டும் பிரகாசமான வானிலை ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் Worcestershire, Wiltshire மற்றும் Severn Valley போன்ற தாழ்வான பகுதிகளில் பிற்பகல் வரை பனிமூட்டமானது நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.