கட்டாயப்படுத்தியதால் 2 கோடிக்கு அந்த ஓவியத்தை வாங்கினேன்.. யெஸ் வங்கி நிறுவனர்!
இந்தியாவில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராணா கபூர், கட்டாயத்தின் பேரில் 2 கோடி ரூபாய் கொடுத்து ஓவியம் ஒன்றை வாங்கியதாக தெரிவித்தது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
யெஸ் வங்கியின் நிறுவனர்களின் ஒருவரான ராணா கபூர், தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் 2020 மார்ச் மாதம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் ராணா கபூர், அவது குடும்பத்தினர் மற்றும் விளம்பரதாரர்களான கபில் மற்றும் தீரஜ் வாத்வான் உள்பட சிலருக்கு எதிராக, சிறப்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ராணா கபூர், அவருக்கும் சோனியா காந்தியின் குடும்பத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்து தெரிவித்துள்ளார். திடுக்கிடும் தகவல்கள் அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ராணா கபூர் கூறியதாவது, 'எம்.எப் ஹுசைன் ஓவியத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியிடம் இருந்து ரூ.2 கோடி கொடுத்து வாங்க ஒப்புக் கொண்டேன். உண்மையில் இது எனது விருப்பத்தின் அடிப்படையில் வாங்கவில்லை.
அப்போது காங்கிரசின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா ஓவியத்தை வாங்குமாறு என்னை கட்டாயப்படுத்தினார்.
இதை செய்வதன் மூலம் சோனியா காந்தி குடும்பத்துடன் நெருக்கமாகலாம் எனவும், பத்ம பூஷன் விருது பெற அது உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
நான் ஓவியம் சேகரிக்கும் நபர் இல்லை. எனினும் பூஷன் விருதுக்கு நான் தகுதியானவனாக இருந்தேன்.
அதனால் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ஓவியத்துக்காக நான் ரூ.2 கோடி காசோலை வழங்கினேன்' என தெரிவித்துள்ளார்.