முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யம்... வெறும் 10 வருடங்களில் உருவாக்கிய நபர்

TikTok China
By Arbin Dec 22, 2025 04:24 AM GMT
Report

சீனாவைச் சேர்ந்த 42 வயது நபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸை விடப் பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

ByteDance நிறுவனம்

இவரது இந்த சாதனை அனைத்தும் வெறும் 10 வருடங்களில் நடந்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான TikTok செயலியை உருவாக்கியுள்ள ByteDance என்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் முதன்மையானவர் Zhang Yiming.

முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யம்... வெறும் 10 வருடங்களில் உருவாக்கிய நபர் | Yiming Built Bigger Than Reliance

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 245 பில்லியன் டொலர் என இருக்க, இன்று ByteDance நிறுவனத்தின் சந்தை மதிப்பு 330 பில்லியன் டொலர்.

சீனாவின் புஜியன் மாகாணத்தில் பிறந்த யிமிங், நான்கை பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்றார். அவர் தனது முதல் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் உட்பட சில நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார்.

தீவிரமடையும் ட்ரம்பின் நடவடிக்கைகள்... மூன்றாவது எண்ணெய் கப்பல் பறிமுதல்

தீவிரமடையும் ட்ரம்பின் நடவடிக்கைகள்... மூன்றாவது எண்ணெய் கப்பல் பறிமுதல்

இந்த நிலையில், முதல் முயற்சியாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்பில், குடியிருப்புகள் மற்றும் கட்டுமானங்களில் தேடுபொறியான 99fang என்ற இணைய பக்கத்தை வெளியிட்டார்.

இதனையடுத்து 2012ல் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து ByteDance நிறுவனத்தை தொடங்கினார். 2016ல் காணொளிகளைப் பகிரும் Douyin என்ற செயலியை சீனாவில் வெளியிட்டார்.

முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யம்... வெறும் 10 வருடங்களில் உருவாக்கிய நபர் | Yiming Built Bigger Than Reliance

செல்வாக்கு மிக்க 100 நபர்கள்

2017ல் அதன் சர்வதேச பதிப்பாக TikTok செயலியை வெளியிட்டார். அதன் பின்னர் TikTok செயலி உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றது. உலகளவில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட டிக்டோக் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாக மாறியது.

முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யம்... வெறும் 10 வருடங்களில் உருவாக்கிய நபர் | Yiming Built Bigger Than Reliance

ஃபோர்ப்ஸ் சீனாவின் 30 வயதுக்குட்பட்ட 30 பேர்கள் பட்டியலிலும், பார்ச்சூன் பத்திரிகையின் 40 வயதுக்குட்பட்ட 40 பேர்கள் பட்டியலிலும், டைம் பத்திரிகையின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் போன்ற புகழ்பெற்ற வணிகப் பட்டியல்களிலும் யிமிங் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

2021ல் ByteDance நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். இருப்பினும் குறிப்பிடத்தக்க பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் யிமிங், தமது நிறுவன நிர்வாகத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்களிக்கும் உரிமையையும் தக்க வைத்துள்ளார்.

முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யம்... வெறும் 10 வருடங்களில் உருவாக்கிய நபர் | Yiming Built Bigger Than Reliance

சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக அறியப்படும் யிமிங், தற்போது உலக பணக்காரர்கள் வரிசையிலும் இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 65 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், உலகின் 27வது பணக்காரராக 42 வயது யிமிங் அறியப்படுகிறார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US