அசிங்கமாக தெரியும் தொப்பையை அசால்ட்டாக குறைக்க தூங்கும் முன் இதை செய்யுங்கள்
கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் உடலில் தொப்பை வருகிறது.
உடலில் அசிங்கமாக தெரியும் தொப்பையை குறைக்க ஒரு சில எளிய செயல்முறைகள் உள்ளன.
அந்தவகையில், உடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சில யோகாசனங்களை மேற்கொள்ளலாம்.
1. பத்த கோணாசனம் (Butterfly Pose)
உடல் எடையை விரைவில் குறைக்க இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது.
2. மர்ஜரியாசனம் பிட்டிலாசனம் (Cat-cow pose)
இந்த ஆசனத்தை பல முறை செய்யலாம். சுமார் 10-15 சுவாச சுழற்சிகளுக்கு அல்லது உங்கள் வசதிக்கேற்ப வரிசையை மீண்டும் செய்யலாம்.
3. அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half spinal twist pose)
இந்த ஆசனம் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது.
4. பாலாசனம் (Child pose)
இது மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தளர்வை ஏற்படுத்தும் முக்கியமான யோகாசனமாகும். இது கீழ்முதுகில் உள்ள பதற்றத்தை விடுவித்து எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது.
5. சேதுபந்தாசனம் (Bridge pose)
சேதுபந்தாசனம் உடல் எடையிழப்புக்கு சிறந்த ஆசனமாகும். இந்த இயக்கத்தை 10 முறை செய்யலாம். இதை 1 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |