ஒரு காலத்தில் ரூ 2க்கு பேனா விற்றவர்.,இன்று மாதம் 24 லட்சம் ஊதியம்: மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள்
இந்தி நடிகர் யோகேஷ் திரிபாதி ரூ.2க்கு பேனா விற்று இன்று புகழ்பெற்ற நபராக மாறிய கதையை பகிர்ந்ததன் மூலம் வைரலாகியுள்ளார்.
யோகேஷ் திரிபாதி
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் பிறந்தவர் 46 வயதான யோகேஷ் திரிபாதி (Yogesh Tripathi). இவர் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த F.I.R தொடரில் 2008யில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து லாபடாகன், ரிங் ராங் ரிங் போன்ற தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது பாப்ஜி கார் பார் ஹைன், ஹப்பு கி அல்தான் பல்தான் ஆகிய தொடர்களில் யோகேஷ் திரிபாதி நடித்து வருகிறார்.
இன்று புகழின் உச்சியில் இருக்கும் யோகேஷ் திரிபாதி, தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்து மும்பை நகர்ந்தார்.
ரூ.2 மதிப்புள்ள பேனாக்கள்
தனது அன்றாட தேவைகளை தானே பூர்த்திசெய்துகொள்ள நினைத்த அவர், ரூ.2 மதிப்புள்ள பேனாக்களை விற்று பிழைப்பு நடத்தினார். அவற்றை ரூ.150க்கு விற்றுள்ளார்.
இவ்வாறாக மும்பையில் 3 ஆண்டுகள் சிறு வேலைகளை செய்துவந்த யோகேஷ் திரிபாதிக்கு பின்னணியில் நிற்கும் நடிகராக வேலை கிடைத்துள்ளது.
அதற்கு அவர் பெற்ற முதல் சம்பளம் ரூ.95 ஆகும்.
அதே சமயம் நாடகத்தில் பணியாற்ற ரூ.75ஐ அவர் பெற்றார். பின்னர் 2007யில் விளம்பரம் மூலம் பிரபலமடைந்ததால் "F.I.R" தொடரில் முதல் வேடம் கிடைத்தது. அப்போது நடிப்பதற்கு ரூ.2800ஐ சம்பளம் யோகேஷ் திரிபாதி பெற்றார்.
அன்றிலிருந்து தனது நடிப்பு பயணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட யோகேஷ் திரிபாதி, இன்று மாதம் ரூ.24 சம்பாதிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக தொலைக்காட்சித் துறையில் பணியாற்றி வரும் யோகேஷ் திரிபாதி, மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |