தீபாவளி நாளில் பிறந்த தேவதை! இரண்டாவது குழந்தைக்கு தந்தையான நடிகர் யோகிபாபு
நகைச்சுவை நடிகர் யோகிபாபு இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுளார்
தீபாவளி நாளில் யோகிபாபு - பார்கவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
தமிழ் நகைச்சுவை நடிகர் யோகிபாபு - பார்கவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, கடந்த 2020ஆம் ஆண்டு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு விசாகன் என்கிற மகன் உள்ளார். இந்த நிலையில் யோகிபாபு இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
தீபாவளி நாளான இன்று இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. யோகிபாபு - பார்கவி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.