ஐபிஎல்! முதல் பந்திலேயே ரஷித்கானின் ஸ்டெம்ப்பை பறக்க விட்ட நடராஜன்... மிரட்டலான வீடியோ
ஐபிஎல் போட்டியில் யார்க்கர் கிங் நடராஜன் ரஷித் கானை முதல் பந்திலேயே க்ளீன் போல்ட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரரான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
Natarajan doing his things, cleaned up Rashid khan with leg stump yorker.#IPL2022 #SRHvGT pic.twitter.com/ixZNBPGmUx
— Ashmin Aryal (@AryalAshmin) April 11, 2022
இதையும் படிங்க: இலங்கை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நம்பிக்கை நட்சத்திரம் ஹசரங்கா!
அதிலும் குஜராத் வீரர் ரஷித் கான் கடைசி ஓவரில் களத்திற்கு பேட்டிங் ஆட வந்த நிலையில் நடராஜனின் பந்துவீச்சை எதிர்கொண்டார். ரஷித் கானுக்கு வீசிய முதல் பந்திலேயே அவரை அவுட்டாக்கினார் நடராஜன்.
அதாவது ரஷித் கானை லெக் ஸ்டம்ப் யார்க்கர் மூலம் போல்ட் ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் நடராஜன்.