அட்சய திருதியை அன்று வீட்டில் இதைக்கூட வைக்கலாமாம்!
பொதுவாகவே அட்சய திருதி அன்று வீட்டில் தங்கம் சார்ந்த பொருள் தான் வாங்கி வைத்து வழிப்படுவார்கள். ஆனால் தங்கத்தை வாங்க இயலாதவர்கள் என்ன செய்யலாம் என்று யோசித்து இருப்பீர்கள்.
ஆகவே வீட்டில் எதை வைத்து வழிப்படலாம் என்று பார்க்கலாம்.
அட்சய திருதியை என்றால் என்ன?
சித்திரை மாதத்தில் வரும் முதல் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை தான் அட்சயதிருதியை என்று கூறுவார்கள்.
அட்சயம் என்றால் குறையாது, திருதியை என்றால் புண்ணியத்தைப் பெறுவது என்று பொருள்படும்.
அட்சய திருதியை நாளில் என்ன செய்ய வேண்டும்?
அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையில் கோலம் இட்டு அதன்மேல் கும்பம் வைக்க வேண்டும்.
கும்பத்தின் அருகில் நெல் ஒரு பிடி வைக்க வேண்டும்.
பூ மற்றும் லட்சுமி நாராயணர் படம் வைத்து வழிப்படுதல் நல்லது. கோவிலுக்குச் செல்வதும் சிறந்த ஒன்றாகும்.
பின் வீட்டில் வழிப்படும் வேளையில் பிள்ளையாரை வணங்கி துதிகளைப் பிராத்திக்க வேண்டும்.
விரதம் இருக்கும் முறை
அட்சய திருதியை அன்று உணவு உண்ணாமல் விரதம் இருந்து, அல்லது அவரவர் உடல் நலத்திற்கு ஏற்ப விரதம் இருக்கலாம்.
விரதம் இருத்தல் கட்டாயம் இல்லை.
தங்கம் வாங்க இயலாதவர்கள் என்ன வாங்கலாம்?
தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நியதி இல்லை.
அன்றைய நாளில் என்ன வாங்கினாலும் அது உகந்ததே. அன்றைய நாளில் வாங்கும் எந்த பொருளும் வீட்டில் குறைவின்றி இருக்கும் என்பதே பொருள்.
ஆகவே எதையும் வாங்கலாம். உப்பு, அரிசி, வலம்புரிச் சங்கு, சோழிகள் மற்றும் தேவையான ஆடைகள் ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.
பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் செய்தல் சுபகாரியங்களை இந்தநாளில் செய்வது நல்லது.
அரிசி
அரிசி என்பது கடவுளுக்கு நிகரான ஒன்றாகும். ஆகவே அது வீட்டில் குறையில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை வாங்கி வைக்கலாம்.
அந்த தினத்தில் புதிதாக வாங்கிய அரிசியிலிருந்து சிறிதளவு எடுத்து யாரேனும் ஒருவருக்கு தானம் அளிப்பதால் பல மடங்கு புண்ணியங்கள் தானம் கொடுப்பவர்கள் மற்றும் அவர்களின் பரம்பரையை வந்து சேரும்.
வலம்புரிச் சங்கு
அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் புதிதாக வெள்ளை நிற வலம்புரிச் சங்கை வாங்கி அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து வீட்டின் பூஜையறையில் வழிபடுவதால் லட்சுமி நாராயணன் எனப்படும் திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருட்கடாட்சம் கிடைக்கும் என்பது மரபாகும்.
தானம் செய்ய வேண்டும்
அன்னதானம் செய்வது சிறந்த ஒரு பண்பாகும்.
அத்துடன் அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கொடுக்க வேண்டும்.
பணமாக யாருக்கும் கொடுக்கக்கூடாது.
அவர்களுடைய தேவை என்னவோ அதைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.