ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே
இப்போது நீங்கள் ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம். அதனை பற்றிய தகவலை பார்க்கலாம்.
ரூ.45,000க்கும் குறைவான விலையில்
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் 'விடா' (Vida) என்கிற நிறுவனத்தை நிறுவி, தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நிறுவனம் தனது 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக Vida VX2 electric scooter அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரானது வெறும் ரூ.59 ஆயிரத்து 490க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விலையை நிறுவனமானது மேலும் குறைத்துள்ளது.
அதாவது, BaaS திட்டத்தின்படி, Vida VX2 electric scooter -ன் ரூ.59,490 ஆரம்ப விலையில் இருந்து ரூ.15,000 குறைத்து ரூ.44 ஆயிரத்து 990க்கு வாங்கலாம்.
Vida VX2 electric scooter ஆனது கோ (Go) மற்றும் பிளஸ் (Plus) என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் Go வேரியண்ட்டின் சலுகை விலை தான் ரூ.44,990 ஆகும்.
அதேபோல, பிளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.64 ஆயிரத்து 990 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.7,000 குறைத்து ரூ.57 ஆயிரத்து 990க்கு வங்கலாம்.
இதில் நீங்கள், BaaS இல்லாமல் பேட்டரி உடன் வாங்கினால் விஎக்ஸ்2 கோ வேரியண்ட்டின் சலுகை விலை ரூ.84,990 மற்றும் பிளஸ் வேரியண்ட்டின் சலுகை விலை ரூ.99,990 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |