இந்த பயணச்சீட்டை நீங்கள் அப்படியே சாப்பிடலாம்... பெர்லின் போக்குவரத்து நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி
பயணச்சீட்டு ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள், அப்படியே ஜாலியாக பெர்லின் முழுவதும் சுற்றுங்கள்... வீட்டுக்குப் போகும்போது, நீங்கள் வைத்திருக்கும் பயணச்சீட்டை வாயில் போட்டு மெதுவாக மெல்லுங்கள்...
கொரோனா முதல் கிறிஸ்துமஸ் வரை எதைக் குறித்தெல்லாம் கவலைப்படுகிறீர்களோ எல்லா கவலையும் அப்படியே மறந்து போகும் என்கிறது பெர்லின் பொதுப்போக்குவரத்து அமைப்பு.
என்ன பயணச்சீட்டை சாப்பிடுவதா என்றால், அது சாப்பிடக்கூடிய பொருளில் செய்த பயணச்சீட்டாம். அதுமட்டுமில்லை, அதன் மீது, மனதை அமைதியுறச் செய்து, உங்களை ரிலாக்சாக ஆக்கும் hemp oil என்ற எண்ணெய் பூசப்பட்டுள்ளதாம்.
(உண்மையில், hemp oil என்பது கஞ்சா போன்ற ஒரு தாவரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு எண்ணெய் ஆகும்)
இப்படிச் செய்வதால் நாங்கள் போதைப்பொருட்களை ஆதரிக்கிறோம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. இந்த hemp oil 100 சதவிகிதம் தாவர எண்ணெய் ஆகும். அதை நீங்கள் சாலடில் கூட பயன்படுத்தலாம் என்கிறது பெர்லின் போக்குவரத்து அமைப்பு.
8.80 யூரோக்களுக்கு விற்கப்படும் இந்த பயணச்சீட்டுகள், வரும் வெள்ளிக்கிழமை வரைதான் கிடைக்குமாம்.