பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலினுக்கு தங்கப்பதக்கம் கொடுக்கலாம்: அண்ணாமலை கிண்டல்
தமிழகத்தில் ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம் சீர்குலைந்து இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பெட்ரோல் குண்டு விவகாரம்
தமிழக மாவட்டம், ஈரோட்டில் நடைபயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம் சீர்குலைந்து இருக்கிறது.
இந்த பெட்ரோல் குண்டு வீசும் விவகாரத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சென்னை கமிஷனர் பேசுகிறார். அவர் பேசுவது, கத்தியை எடுத்து வெட்டியும் சாகவில்லை என்பது போல இருக்கிறது.
கோவையில் ஏற்பட்ட ஆம்னி வெடிப்பு சம்பவத்தை தமிழக முதலமைச்சர் சிலிண்டர் விபத்து என்று கூறுகிறார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி கொடுக்கும் முதலமைச்சர் அப்படி தான் கூறுவார்" என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேலும் பேசிய அண்ணாமலை, "இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என திமுகவினர் கூறுகின்றனர். பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலினுக்கு தங்கப்பதக்கமே கொடுக்கலாம்.
சட்டமன்ற தேர்தலில் திமுக 511 வாக்குறுதிகள் அளித்தது. ஆனால், இதுவரை 20 வாக்குறுதிகள் கூட முழுமையாக திமுக நிறைவேற்றவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |