இந்த நாட்டவர்கள் பிரான்சில் 90 நாட்கள் மட்டுமே தங்கமுடியும்: விதியை மாற்ற பிரான்ஸ் மறுப்பு
பிரெக்சிட்டுக்குப் பின், பிரித்தானியர்கள் பிரான்சில் 90 நாட்கள் மட்டுமே தொடர்ச்சியாக தங்கமுடியும் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த விதி பிரித்தானியர்கள் பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பிரான்ஸ் செனேட்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியர்கள் பிரான்சில் 90 நாட்கள் மட்டுமே தொடர்ச்சியாக தங்கமுடியும் என்ற விதி பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பிரான்ஸ் செனேட்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, பிரெக்சிட்டுக்குப் பிறகு, பிரித்தானியர்கள் பிரான்சுக்கு வந்தால், 180 நாட்களுக்கு 90 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக விசா இல்லாமல் பிரான்சில் தங்கமுடியும் என விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஆனால், பிரெஞ்சு செனேட்டர்கள் பலர், இந்த விதியை மீளாய்வு செய்யவேண்டுமென பிரான்ஸ் அரசைக் கோரியுள்ளார்கள்.
குறிப்பாக Finistère Senator Michel Canévet, ஐரோப்பிய மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், பிரெக்சிட்டுக்கு முன்பிருந்தே பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் இந்த 90 நாள் விதியால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், அதனால் மீண்டும் பிரித்தானியர்கள் 180 நாட்கள் விசா இல்லாமல் பிரான்சில் தங்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யமுடியுமா என்றும் கேட்டிருந்தார்.
ஆனால், இது பிரான்ஸ் மட்டும் முடிவு செய்யும் ஒரு விடயமல்ல, ஐரோப்பிய மட்டத்தில் முடிவு செய்யப்பட்ட ஒரு விடயம், ஆகவே, அதை பிரான்ஸ் மட்டும் நினைத்தால் மாற்றமுடியாது என அவருக்கு பிரான்ஸ் அரசு தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாதான் ஏற்கனவே நடைமுரையில் இருந்த தடையில்லா போக்குவரத்து திட்டத்திலிருந்து வெளியேறியது, அதாவது பிரித்தானியாதான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது என்றும் பிரான்ஸ் அரசு கூறிவிட்டது.