இனி யூடியுப்பில் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்த முடியாது
இனிமேல் யூடியூப்பில் குறிப்பிட்ட சில அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் யூடியுப்பானது புதிதான சிலவற்றை கொள்கைகளை முன்வைத்துள்ளது.
முதல் ஏழு வினாடிகளில் ஏதேனும் தவறான மொழி பேசினாலோ அல்லது "தொடர்ந்து"தவறான வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டாலோ, விதிமுறைகளின்படி, உங்கள் வீடியோவிற்கு பணம் வழங்கப்படமாட்டாது.
(உங்கள் தம்ப்நெய்ல் புகைப்படத்திலோ அல்லது தலைப்புகளிலோ உள்ள அவதூறு வார்த்தைகளினால் உங்கள் யூடியுப் கட்டணம் தடைசெய்யப்படலாம்] .
ஆனால் கடந்த செவ்வாய் கிழமை யூடியுப்பின் தலைவரான கோனார் கவனாக் வழங்கிய வீடியோ விளக்கத்தில், யூடியூப் கட்டண கொள்கை, விதிமுறைகள் இம்முறை மிகவும் கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதிகமாக பயன்படுத்தப்படும் "பிட்ச்," "டூச்பேக்,"மற்றும் "ஷிட்" போன்ற வார்த்தைகள், கவனாக்கின் கருத்துப்படி பணமதிப்பு நீக்கம் செய்யாது.
முன்பே பதிவு செய்யப்பட்ட இசை அல்லது ஸ்டாண்ட்-அப் வீடியோ உள்ளடக்கத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான அவதூறு வார்த்தைகளுக்கும் பண நீக்கம் செய்யப்படமாட்டாது.
தணிக்கை செய்யப்பட்ட அவதூறு மற்றும் தலைப்பு, குறும்படம் அல்லது வீடியோவில் "ஹெல்" அல்லது போன்ற வார்ததைகளை பயன்படுத்தினால் பரவாயில்லை, ஆனால் "ஃபக்" போன்ற வார்ததைகள் விளம்பரதாரர்களுக்கு நட்பற்றதாகக் கருதப்படுகிறது.
பணமதிப்பிழப்பு ஸ்டிக்கர்களைப் பெற்ற எந்த YouTube வீடியோக்களும் இந்த வாரம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கிஸ்மோடோ தெரிவித்துள்ளது.
கொள்கை மாற்றம் செய்யப்பட்டது அவதூறு வார்ததை அல்லது இழிவான மொழியைக்குறித்து செய்யப்படவில்லை, ஆனால் விளம்பரம் செய்வதற்கு இது ஏற்றது அல்ல" என்று YouTube கூறியது.