உனக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை.., இலங்கை நட்சத்திர வீரரிடம் MS தோனி சொன்னது என்ன?
2023 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வேகப் பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவிடம் அடுத்த ஐபிஎல் தொடரில் உனக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை என தோனி கூறியுள்ளார்.
மகேஷ் தீக்ஷனா
2011 -ம் ஆண்டு முதல் இலங்கை அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளராக இடம் பெற்றுவந்த மகேஷ் தீக்ஷனாவின் பந்துவீச்சு லசித் மலிங்காவின் பந்துவீச்சு போல இருந்ததால் அவரை 2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
ஆனால், அவருடைய பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், அவரை மெருகேற்றி அணியில் முக்கிய பந்துவீச்சாளராக பயன்படுத்த தோனி முடிவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, 2022 ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்டுகளை மகேஷ் தீக்ஷனா எடுத்தார். பின்பு, 2023 ஐபிஎல் தொடரில் 11 விக்கெட்டுகள் எடுத்தார். அதிக அனுபவம் இல்லாத பந்து வீச்சாளரை வைத்து சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
தோனி சொன்னது என்ன?
அந்த தொடர் முடிந்த பிறகு இலங்கை செல்லும் முன்பு தோனியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று மகேஷ் தீக்ஷனா சென்றுள்ளார். அப்போது அடுத்த சீசனில் உனக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை என தோனி கூறியுள்ளார்.
அடுத்த சீசனில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்வது மட்டும் தான் உனக்கு வேலை எனவும் கூறியுள்ளார். அப்போது தான் மகேஷ் தீக்ஷனாவுக்கு தான் செய்த தவறு நினைவுக்கு வந்தது. அவர், 2023 ஐபிஎல் தொடரில் ஃபீல்டிங்கில் 4 - 5 கேட்ச்களை கோட்டை விட்டார். அப்படி இருந்தும் தோனி வாய்ப்பளித்துளார்.
ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் மற்றும் பேட்டிங் வாய்ப்பு கிடைத்தாலும் ஓரளவு ரன் சேர்க்க வேண்டும் என்பதை தோனி கூறியுள்ளார் என்பதை தீக்ஷனா புரிந்து கொண்டுள்ளார். வரும் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்து தீக்ஷனா விளையாட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |