தினமும் ரூ.19 செலுத்தினால் மாதம் தோறும் ரூ.5000 பெறலாம்.., இந்த திட்டத்தை பற்றி தெரியுமா?
மத்திய அரசு கொண்டு வந்த 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) திட்டத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா
ஓய்வுபெறும் மூத்தகுடி மக்களுக்கான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) திட்டத்தை பார்க்கலாம்.
தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நபர்களுக்கான திட்டமாக இது செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒருவர் ரூ.5000 வரை மாதந்தோறும் பென்ஷனாக பெற முடியும். இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய நபர்கள் சேரலாம்.
அடல் பென்ஷன் யோஜனா அதாவது APY திட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் இதுவரை 56 லட்சத்திற்கும் அதிகமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 7 கோடி பேர் இணைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், எந்தவொரு குடிமகனும் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள், 30 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 577 ரூபாய் 30 ஆண்டுகள் செலுத்த வேண்டும்.
அதாவது ஒரு நாளைக்கு நீங்கள் ரூ.19 செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள், 60 வயதிற்குப் பிறகு மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |