தங்குவதற்கு வீடில்லை.. நாயுடன் அதன் இடத்தில் 9 மாதங்கள் தங்கினேன்! மனம் திறந்த இளம் நடிகை
நடிகை பியா பாஜ்பாய் சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறியதால் நாயுடன் பல மாதங்கள் தங்கியதாக தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஏகன், கோவா, கோ போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறியதால் அனுபவித்த துயரங்கள் குறித்து பியா பாஜ்பாய் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், 'எனக்கு 15 வயது இருக்கும்போது நான் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றேன். தங்குவதற்கு இடமில்லாமல் 2 இரவு டெல்லி ரயில் நிலையத்திலேயே தூங்கினேன். பின்பு எப்படியோ மும்பை சென்று வீடு கிடைக்காமல் ஒரு வீட்டின் உரிமையாளரின் நாய் இருக்கும் அறையில், அந்த நாயுடன் 9 மாதங்களுக்கு மேல் தங்கினேன். ஆனால் எல்லா போராட்டத்திற்கு பிறகும் நிச்சயம் நல்லது நடக்கும்' என தெரிவித்தார்.
பியா பாஜ்பாய் தற்போது 'Lost' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.