சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டதால் இளம் புகலிடக்கோரிக்கையாளர் எடுத்த துயர முடிவு
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இளம் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற சுவிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்த இளைஞர்
சென்ற ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு வந்த ஆப்கன் நாட்டவரான Alireza (18) என்ற அந்த இளைஞர், ஜெனீவாவில் குடும்பம் ஒன்றுடன் தங்கவைக்கப்பட்டிருந்திருக்கிறார். உற்சாகத்துடன் கல்வி பயின்றுகொண்டே பிரெஞ்சு மொழியும் கற்றுவந்தார் அவர்.
நீதிமன்றத்தின் உத்தரவால் ஏமாற்றம்
ஆனால், சுவிஸ் நீதிமன்றம் ஒன்று அவரை கிரீஸ் நாட்டுக்குச் செல்ல உத்தரவிட்டது.
சுவிட்சர்லாந்தில் வாழலாம் என்ற ஆசையில் வந்த தன்னை நட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏமாற்றமடைந்த Alireza தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளது என ஏற்கனவே புலம்பெயர்தல் அதிகாரிகளை மருத்துவர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.