ஜோ பைடன் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்! கோபமாக கத்திய சிறுவன்..வைரல் வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர் என்றும், ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் போல் பயங்கரமான செயல்களை அவர் செய்கிறார் என்றும் சிறுவன் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
QAnon இயக்கம்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகவும், அரசின் ரகசிய சதியை குற்றம்சாட்டி தீவிர வலதுசாரி கோட்பாட்டை ஆதரிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமாக அறியப்படுவது QAnon.
நாடாளுமன்ற கலவரத்திற்கு முன்பில் இருந்து டிரம்ப்பின் ஆதரவாளர்களை பின் தொடரும், புதிய HBO ஆவணப்படத்தில் சிறுவன் ஒருவன் பேசிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் ஆவேச பேச்சு
QAnon பேரணியில் இடம்பெற்றிருந்த ஜேடன் எனும் சிறுவன், 'ஜோ பைடன் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர். அவர் குழந்தைகளை கடத்துவது மட்டுமின்றி, வைரஸை உருவாக்கிய ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா போல் பயங்கரமான செயல்களை செய்கிறார். வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது, ஆனால் அது இப்போது இல்லை. குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்' என்று கூறினான்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, குறித்த சிறுவனை அவரது இல்லத்தில் வைத்து நேர்காணல் நடத்தினர்.
நேர்காணலில் சிறுவன் கூறிய விடயங்கள்
அப்போது ஜேடன் எனும் அந்த சிறுவன் கூறுகையில், 'அமெரிக்க தலைவர்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்த ஊர்வன இரத்தம் கொண்டவர்கள். அவர்கள் அடிப்படையில் ரோபோக்கள் மற்றும் ரோத்ஸ்சைல்ட்ஸ் போன்ற தீய மனிதர்கள், எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக Adrenal Clone-ஐ பெற குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சி எடுப்பவர்கள்.
அவர்கள் குழந்தைகளை எடுத்துக் கொள்கிறார்கள் மற்றும் அவர்களை அழைத்துக் கொண்டு நீர் மூழ்கி கப்பலில் செல்கிறார்கள். குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் தீவான Epstein-க்கு சென்று அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நிலத்தடி வரை செல்கிறார்கள்' என தெரிவித்துள்ளான்.
@HBOMax via Channel 5 with Andrew Callaghan
பள்ளியில் எனக்கு நண்பர்கள் இல்லை எனக் கூறும் அந்த சிறுவன், Dark stream media எனும் இணையதளத்தில் பல விடயங்களை படித்ததாக கூறினான். குறிப்பாக, மின்தடை ஏற்படும் என்றும், ட்ரம்ப் செய்திகளை நேரலையாக திரையிடுவார் என்றும் படித்ததாக குறிப்பிட்டான்.
QAnon-யின் குற்றச்சாட்டுகள்
QAnon-யின் சதிக்கோட்பாடானது சமீபத்திய ஆண்டுகளில் பிரதான தளத்திற்கு நகர்ந்துள்ளது. பல அரசியல், வணிகம் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களை உள்ளடக்கிய Deep State-க்கு எதிராக ட்ரம்ப் ஒரு ரகசிய போரை வழி நடத்துகிறார் என இந்த கோட்பாடு குற்றம்சாட்டுகிறது.
மேலும், உயர்குடிகள் சாத்தானை வணங்குகிறார்கள், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்கிறார்கள் மற்றும் நரமாமிசத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டுகிறது.