கனடாவில் தாக்குதலுக்குள்ளான தொழிலதிபர் உயிரிழப்பு..பிரித்தானிய இராணுவ வீரர் கைது
கனேடிய தொழிலதிபர் தாக்குதலுக்கு ஆளாகியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பிரித்தானிய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபரை தாக்கிய இராணுவ வீரர்
கடந்த ஆகத்து 28ஆம் திகதி டொராண்டோவின் Downtown பகுதியில் உள்ள பார் ஒன்றில், கனேடிய தொழிலதிபரான பிரெட் ஷெஃப்பீல்டு (38) தாக்குதலுக்கு உள்ளானார்.
அவரை பிரித்தானிய இராணுவ வீரரான கிரேக் கிப்ஸன் (28) மேல் தாடையில் முழங்கையால் தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த ஷெஃப்பீல்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.
பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு பிரித்தானியாவில் கட்டுப்பாடு விதிக்க திட்டம்: பின்னணியில் பகீர் காரணம்
பிரித்தானியர் கைது
இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது குறித்த அறிந்த பொலிஸார் உடனடியாக கிப்சனை கைது செய்தனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக திங்களன்று காவல்துறை அறிவித்தது.
பாரில் மது அருந்தும்போது ஏற்பட்ட சண்டையினால் இந்த தாக்குதல் சம்பவம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |