பிரித்தானியாவில் தடுப்பூசி விதிமுறைகளில் திருத்தம்: இளைஞர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
பிரித்தானியாவில் கோவிட்-19 தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸுக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கும் பிரித்தானிய இளைஞர்கள் தங்களுக்கான இடண்டாவது டோஸ் தடுப்பூசியை 6 வாரங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, 8 வாரங்கள் நிறைவடைந்த பிறகே இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். ஆனால், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவுள்ள ஆதாரத்தை காட்டும் இளைஞர்கள் தங்களுக்கான தடுப்பூசியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தனியார் மருத்துவமனைகளும், பொது மருத்துவர்கர்களும் கடைபிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு திரும்பும் பயணிகள் முழுமையாக அத்தடுப்பூசி போடப்பட்டவர்களாக இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவை இல்லை என இன்று முதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கை இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.