அவசர உதவி கேட்டு 100 முறை அழைப்பு விடுத்த பிரித்தானியருக்கு ஏற்பட்ட துயரம்: கடைசியாக கூறிய வார்த்தை
பிரித்தானியாவில் இளம் வயது தந்தை ஒருவர் இறக்கும் முன்னர், தமது குடியிருப்புக்கு வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபரொருவர் காத்திருப்பதாக பொலிசாரிடம் புகார் அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவசர உதவி கேட்டு 98 முறை அழைப்பு
பிரித்தானியாவில் போதை மருந்து மற்றும் மதுவுக்கு அடிமையான 26 வயது தாமஸ் ஓவன்ஸ் என்பவர், உடல்நலக் கோளாறினால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதன்பொருட்டு, அவசர உதவி கேட்டு 98 முறை அவர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 செப்டம்பர் மாதம் லிவர்பூல் நகராட்சிக்கு சொந்தமான மதுமான விடுதிக்கு வெளியே ஓவன்ஸ் அட்டகாசம் செய்துள்ளார்.
அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என கட்டாயப்படுத்திய இரு பொலிசாரையும் அவர் அவமதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது பைகளில் சோதனையிட்ட பொலிசார் போதை மருந்து எதையும் மீட்கவில்லை என்பதுடன், கைவிலங்கிட்டு அருகாமையில் உள்ள பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், பரிசோதனைக்காக ராயல் லிவர்பூல் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனிடையே அவரது நிலை மோசமடைந்ததாகவும் CPR அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஓவன்ஸ் இரண்டு முறை மாரடைப்பால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொண்டைக்குழியில் போதை மருந்து பொட்டலம்
இந்த நிலையில், அவரது தொண்டைக்குழியில் இருந்து போதை மருந்து பொட்டலம் ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவர் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார், செப்டம்பர் 12ம் திகதி மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடற்கூறு ஆய்வில் போதை மருந்து காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரையில் ஓவன்ஸ் 98 முறை அவசர உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
2021 மே மாதம் உளவியல் சிகிச்சை முன்னெடுக்கவும் அவர் தயாராகியுள்ளார். மட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பொலிசாருக்கு தொடர்பு கொண்ட ஓவன்ஸ், துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் தமக்காக காத்திருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார்.
ஆனால் அப்படியான ஒருவரையும் அப்பகுதியில் கண்டுபிடிக்கவில்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.