சிறுமியை தாக்கிய சிக்ஸர்! தேடிச் சென்று பார்த்த ரோகித் சர்மா
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சிறுமியை தாக்கியது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
111 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா அதிரடியாக 76 ஓட்டங்களும், ஷிகர் தவான் 31 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
நேற்றைய போட்டியில் ரோகித்தின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் அடித்த ஒரு சிக்ஸர் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த 6 வயது சிறுமியை தாக்கியது.
PC: Twitter
இங்கிலாந்து அணியின் பிஸியோதெரபிஸ்டுகள் விரைந்து சென்று சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்தனர். அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு பெரிதளவில் காயங்கள் ஏற்படவில்லை.
Shoutout to the @englandcricket physios yesterday ?
— England’s Barmy Army (@TheBarmyArmy) July 13, 2022
6 year-old Meera was hit by a Rohit Sharma six in the crowd and they quickly rushed round to check on her.
She was okay and even received a visit off Sharma himself later in the day!#ENGvIND pic.twitter.com/mbvOsoT6lQ
இதனை அறிந்த ரோகித் சர்மா போட்டி முடிந்ததும், குறித்த சிறுமியை தேடிச் சென்று நலம் விசாரித்தார்.
PC: AFP