வயிற்றுவலியால் வைத்தியசாலைக்கு சென்ற பெண் மரணம்
இலங்கையில் கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்ட ஊசியால் மற்றுமொரு சந்தேகத்திற்கிடமான மரணம் பதிவாகியுள்ளது.
நடந்தது என்ன?
21 வயதான சமுதி சங்தீபனி மதுஷிகா கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக யட்டிநுவர கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு saline ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக சமோதி சங்தீபனியின் தாயார் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவருக்கு ஊசி ஏற்றப்பட்ட பின்னர் எரிவதாகக் கூறியதால், மீண்டும் ஒரு ஊசி ஏற்றப்பட்டதாகவும், அதன் பின்னர் கண்கள், வாய் எரிவதாக சமோதி சங்தீபனி தனது தாயிடம் கூறியதாகவும் அவரின் தந்தை தெரிவித்தார்.
ஏற்றப்பட்ட ஊசியில் பிரச்சினை இருப்பதாக சங்தீபனியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜூன திலகரத்ன தெரிவித்தார்.
எனினும், சிகிச்சை அளிக்கப்பட்ட போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகவும் அதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.
சிக்கல்களுக்கு உள்ளான எந்தவொரு மருந்தும் அவருக்கு வழங்கப்படவில்லை எனவும் அவருக்கு வழங்கப்பட்ட மருந்து வைத்தியசாலையில் ஏனைய நோயாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த காணொளியை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |