பானிபூரி சாப்பிட்ட அரைமணி நேரத்தில் தொடர் வாந்தி! அடுத்தநாள் உயிரிழந்த பட்டதாரி இளம்பெண்... எச்சரிக்கை செய்தி

girl death investigation panipuri
By Raju Sep 25, 2021 11:40 AM GMT
Report

தமிழகத்தில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி. பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்து உள்ளார்.

பின்னர் ரோகிணி தேவி எலக்ட்ரோல் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு இரவில் படுக்க சென்றார். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம் போல் எழுந்தார். அப்போது குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த ரோகிணி சோர்வாக காணப்பட்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல முடிவு செய்தனர். அப்போது திடீரென ரோகிணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் முலம் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ரோகிணி ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே ரோகிணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரோகிணியின் தந்தை கல்யாண சுந்தரம் வீரப்பன் சத்திரம் பொலிசில் புகார் செய்தார். அதில் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் தனது மகள் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொலிசார் கூறுகையில், பெண்ணின் உறவினர்கள் பானிபூரி சாப்பிட்டதால் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் வரும் தகவலின் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தப்படும். மேலும் பானிபூரி எந்த கடையில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US