பிரித்தானியாவில் படுகாயங்களுடன் வீட்டில் இறந்துகிடந்த அழகிய இளம்பெண்! நடந்தது என்ன? வெளியான கண்ணீர் காரணம்
பிரித்தானியாவில் தான் ஆசையாக வளர்த்த நாய் தாக்கியதில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
Birmingham-ஐ சேர்ந்தவர் Keira Ladlow.இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவர் படுகாயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்தனர்.
உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த Keira Ladlow-ன் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் வளர்த்த நாய் கடித்தே Keira உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த Keiraவின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து Keira-வின் உறவினர் Abeygail Barrett பேஸ்புக்கில் எழுதுகையில், Keira ஏற்கனவே வளர்த்த நாய் புற்றுநோயால் உயிரிழந்துவிட்டது.
பின்னர் தோட்டம் ஒன்றிலிருந்து இந்த நாயை எடுத்து வந்த அவர் வளர்த்து வந்தார்.
சில நேரங்களில் நாய்கள் நல்ல நோக்கங்களுடனும் மீட்கப்படுகின்றன, ஆனால் அவற்றின் கடந்த காலம் அவர்களை சோகமாக கணிக்க முடியாததாக ஆக்குகிறது என பதிவிட்டுள்ளார்.
பொலிசார் கூறுகையில், இந்த மரணத்தில் சந்தேகத்துக்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை.
இது ஒரு சோகமான சம்பவமாகும் என கூறியுள்ளனர்.
