வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்: காரில் இளம்பெண் உடல் இருந்ததால் அதிர்ச்சி

France
By Balamanuvelan Sep 24, 2026 10:21 AM GMT
Report

During customs check, young girl found dead in back of her ex's car: சுங்க அதிகாரிகளின் வாகன சோதனையின்போது, கார் ஒன்றின் பின்னால் இளம்பெண் ஒருவரின் உடல் கிடைத்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

திங்கட்கிழமையன்று, பிரான்சிலுள்ள Brignoles என்னுமிடத்தில் சுங்க அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

காரில் கிடைத்த இளம்பெண்ணின் உடல்

அப்போது, மேத்யூ (29) என்பவரது காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட, காரின் பின்பக்கத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கீழே ஒரு இளம்பெண்ணின் உடல் மறைந்துவைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். 

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்: காரில் இளம்பெண் உடல் இருந்ததால் அதிர்ச்சி | Young Girl Found Dead In Back Of Her Ex Car

அது குறித்து விசாரித்தபோது, மேத்யூவால் சரியான விளக்கமளிக்கமுடியாததால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அது லாரிஸ்ஸா ப்ரிட்டோ (Larissa Brito, 25) என்னும் மொடலுடைய உடல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பிரான்சில் அரியவகை வைரஸ் தொற்றால் உயிருக்குப் போராடும் பிரித்தானியர்

பிரான்சில் அரியவகை வைரஸ் தொற்றால் உயிருக்குப் போராடும் பிரித்தானியர்

மேத்யூவும் லாரிஸ்ஸாவும் காதலித்துவந்த நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்துள்ளனர். அதற்குப் பிறகும் மேத்யூ லாரிஸ்ஸவை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலைச் சேர்ந்த லாரிஸ்ஸா, மூன்று ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவந்துள்ளார். மொடலாக பணியாற்றிவந்த லாரிஸ்ஸா, மேத்யூவுக்கு குற்றவாளிக் கும்பல்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரைப் பிரிந்துள்ளார். 

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்: காரில் இளம்பெண் உடல் இருந்ததால் அதிர்ச்சி | Young Girl Found Dead In Back Of Her Ex Car

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, மேத்யூ தன் அறைக்கு வந்துள்ளதாக தன் தாயிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார் லாரிஸ்ஸா. அதற்குப் பிறகு அவருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தன் மகளைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார் லாரிஸ்ஸாவின் தாய்.

திங்கட்கிழமை, வாகன சோதனையின்போது காரில் இளம்பெண் ஒருவருடைய உடலுடன் சிக்கிய அந்த நபர்தான் மேத்யூ!

அவரது காரின் பின்பக்கத்தில் இருந்தது லாரிஸ்ஸாவின் உடல். உடல் முழுவதும் கத்திக்குத்துக் காயங்களுடன் லாரிஸ்ஸாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் மேத்யூவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US