17 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி 19 வயது இளம் பெண் செய்த செயல்! கடும் அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர்
தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் 19 வயது இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் லாவண்யா(19) என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். இதே பங்கிற்கு அடிக்கடி கணேசன் என்ற 17 வயது சிறுவன், பெட்ரோல் போட வந்துள்ளான்.
இதில் லாவண்யா மற்றும் கணேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு சிறுவன் கணேசனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது கணேசனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற லாவண்யா, கணேசனிடம் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து லாவண்யா, கணேசனை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் சிறுவன் கணேசனை காணவில்லை என்று தேடிய போது, கணேசன் வீட்டிற்கு வந்து லாவண்யாவும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கணேசனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய பொலிசார் நடத்திய விசாரணையில் உண்மை என்பது தெரியவந்ததால், லாவண்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.