பிறந்தநாள் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற இளம்பெண்.., ஒற்றை நொடியில் நடந்த விபரீதம்
தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்ற கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி மரணம்
இந்திய மாநிலமான கர்நாடகா, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ரக்ஷிதா (16). இவர், பெங்களூருவில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.காம் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனால் அங்கிருந்து காரில் வந்துள்ளார்.
அப்போது, சிக்பள்ளாப்பூர் அருகே நந்திகிராமம் பகுதியில் சென்ற போது திடீரென காரானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர், சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது, பலத்த காயமடைந்த ரக்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் டிரைவர் பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக நந்திகிராமம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |