இந்திய இளம் பெண்களுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அரிய வாய்ப்பு!
உலகப் பெண்கள் தினத்தை (அக்டோபர் 11) முன்னிட்டு, பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் 18 முதல் 23 வயதுக்குட்பட்ட இந்திய இளம் பெண்களுக்கு ஒரு நாள் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராக பணிபுரிய அனுமதிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வருடாந்திர போட்டி, இந்தியாவின் சிறந்த இளம் பெண்களைத் தங்கள் திறமைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை சர்வதேச அரங்கில் நிரூபிக்க அழைக்கிறது.
போட்டியில் கலந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள் "முன்னேற்றமான தொழில்நுட்பங்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்குப் பலன் தரும் வகையில் பிரித்தானியா மற்றும் இந்தியா இணைந்து எவ்வாறு செயல்படலாம்?" என்ற கேள்விக்கான பதிலை ஒரு நிமிட வீடியோவாக சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் வெற்றி பெறும் ஒருவருக்கு, டெல்லியில் ஒருநாள் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராக (British High Commissioner) பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வாய்ப்பு எதிர்கால பெண்தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் மிக முக்கியமானது.
2023-ஆம் ஆண்டு இப்போட்டியில் வெற்றி பெற்றவர், சென்னையைச் சேர்ந்த ஷ்ரேயா தர்மராஜன், பல முக்கிய அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
இந்த ஆண்டின் போட்டி, செப்டம்பர் 4, 2024 வரையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும், மேலும் இது டெல்லியில் நேரடியாக நடத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK invites Indian young women to be British High Commissioner for a day, international day of the girl child, UK India