25 வயது லொறி ஓட்டுநரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்! சாலையில் கிடந்த சடலம்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் லொறி ஓட்டுநர் ஒருவர், மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளம் லொறி ஓட்டுநர்
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் எனும் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
அப்போது உயிரிழந்தவர் ஜார்கண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த போலாகுமார் தீபக் மஹதோ (25) என்றும், அவர் லொறி ஓட்டுநர் என்றும் தெரிய வந்துள்ளது.
Representational Image
இளைஞர் அடித்துக்கொலை
அவர் துர்காடி கோட்டைக்கு அருகே மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வன்முறை தாக்குதலுக்கு பின்னால் உள்ள தூண்டுதல் உடனடியாகத் தெரியவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் சரியான எண்ணிக்கை கண்டறியப்பட்டு, குற்றத்தை பதிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றும் அவர் PTIயிடம் கூறியுள்ளார்.
iStock Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |