வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி வெட்டிக்கொலை! பதற வைத்த சம்பவம்
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகரைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (24). இவரும் கார்த்திகா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிய வந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இளம்ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 30ஆம் திகதி திருமணம் செய்துகொண்டது.
கொடூர கொலை
இந்த நிலையில் மாரிச்செல்வத்திற்கு வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, அவரையும் காதல் மனைவி கார்த்திகாவையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆட்களை வைத்து மகள், மருமகன் இருவரையும் முத்துராமலிங்கம் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Representative image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |