மாணவியை ஆற்றுக்குள் வீசி கொலை செய்த இளம் காதலர்கள்: பிரான்சையே பரபரப்படைய செய்துள்ள ஒரு கொடூர சம்பவம்
தங்களுடன் படிக்கும் சக மாணவியை அடித்து ஆற்றில் வீசிக்கொன்ற இளம் காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரான்ஸ் நாட்டையே பரபரப்படையச் செய்துள்ளது
. பாரீஸுக்கு வெளியே உள்ள Argenteuil என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி Alisha (14). உள்ளாடைகளுடன் அவள் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து Alishaவுக்கும் அவளுடன் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனது காதலியான சக மாணவி ஆகியோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதாவது அவர்கள் Alishaவை இணையம் வாயிலாக வம்புக்கிழுத்துள்ளார்கள். இந்த தகவலை Alisha தன் தாயிடம் கூறி, ஒரு நாள் அவர்கள் என்னைக் கொலை செய்துவிடப்போகிறார்கள் பாருங்கள் என்று கூறியிருக்கிறாள்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, தங்களை சந்திக்க வருமாறு Alishaவுக்கு இருவரும் குறுஞ்செய்தி அனுப்ப, அவளும் அவர்களை சந்திக்கச் சென்றிருக்கிறாள்.
அப்போது, தூண் ஒன்றின் பின்னால் மறைந்திருந்த அந்த பையன் Alishaவை பின்னாலிருந்து கீழே தள்ளி அவளை தாக்கியிருக்கிறான்.
தனது கைரேகை அவள் மீது படக்கூடாது என்பதற்காக அவன் கையுறையும் அணிந்திருந்திருக்கிறான்.
அவளை குத்தி, அடித்து, தலை முடியைப் பிய்த்து, பின் அவனும் அவனது காதலியுமாக சேர்ந்து அவளைத் தூக்கி Seine என்ற ஆற்றுக்குள் வீசியிருக்கிறார்கள்.
பின்னர் இருவரும் அந்த வீட்டுக்கு திரும்ப, அந்த பையனின் சட்டையில் இரத்தக்கறை இருந்திருக்கிறது.
அவன் தன் தாயிடம் தான் Alishaவை தாக்கி ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டதாக கூற, பதறிப்போய் அந்த பெண் ஆற்றுக்கு ஓடியிருக்கிறார்.
அங்கே இரத்தக்கறை படிந்த கையுறை மற்றும் ஒரு கொத்து தலைமுடி ஆகியவை கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் அவர்.
ஆனால், அவர் வீடு திரும்பும்போது அவரது மகனும் காதலியும் அங்கே இல்லை. இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என Alishaவின் தாய் பொலிசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.
பொலிசார் Seine ஆற்றுக்கு சென்றபோது, அங்கே Alishaவின் உயிரற்ற உடலைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அவளை ஆற்றில் தள்ளிய அந்த பையனும் அவனது காதலியும், மற்றொரு நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதைக் கண்டு பொலிசார் அவர்களை கைது செய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
? "Ma fille m'avait dit qu'elle était menacée de mort par ce garçon et cette fille"
— BFMTV (@BFMTV) March 9, 2021
La mère de l'adolescente noyée à Argenteuil témoigne pic.twitter.com/RgbtFTQbc8
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான ஒரு சந்திப்புக்குப் பின் பேசிய அரசு செய்தித்தொடர்பாளரான Gabriel Attal, இந்த பெண்ணுக்கு நேர்ந்த விடயம் மிக கொடூரமானது, சகிக்க இயலாதது என்று கூறியுள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள Gabriel Attal, முன்பெல்லாம் வகுப்பறையில் மாணவர்கள் வம்பு செய்வார்கள், சமீப ஆண்டுகளாக, வகுப்பு முடிந்தும் வம்பு செய்வது ஒன்லைனில் தொடர்கிறது என்றார்.